Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2011 நவம்பர் 20 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அம்பாறை மாவட்டத்திலுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் கிழக்கு மாகாண விவசாய மீன்பிடி அமைச்சர் டாக்டர் து.நவரெட்ணராஜா தனது நிதியொதுக்கீட்டிலிருந்து மாவட்டத்திலுள்ள 10 மீனவ சங்கங்களுக்கு 70 இலட்சம் ரூபா பெறுமதியான உதவிகளை வழங்கியுள்ளார்.
மீன்பிடி வள்ளங்கள், வலைகள், மீன்பெட்டிகள், சைக்கிள்கள் ஆகியவற்றை அவர் வழங்கிவைத்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் பாணமை தொடக்கம் அட்டாளைச்சேனை வரையிலான 10 மீன்பிடி சங்கங்களிலுள்ள மீனவர்களுக்கு 50 தோணிகள், 467 வலைகள், 40 சைக்கிள்கள், 40 மீன்பெட்டிகள், 40 தராசுகள் என்பன முதற்கட்டமாக வழங்கிவைக்கப்பட்டன.
இதற்கான நிகழ்வு ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை மாலை மாவட்ட நீரியல்வள அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எல்.எம்.இம்தியாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண விவசாய மீன்பிடி அமைச்சர் டாக்டர் து.நவரெட்ணராஜா, கிழக்கு மாகாண
மீன்பிடி பிரதிப் பணிப்பாளர் எஸ்.சுதாகரன், விவசாய அமைச்சின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி எஸ்.நந்தகுமார், ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரதம கணக்காளர் கனகரட்ணம் ஆகியோர் கலந்து கொண்டு மீனவர்களுக்கான மீன்பிடி உபகரணங்களை
வழங்கிவைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
17 Apr 2021
17 Apr 2021