2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

நீரில் மூழ்கிய சுனாமி வீட்டுத்திட்டம்

A.P.Mathan   / 2011 நவம்பர் 25 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக கல்முனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட மருதமுனை பகுதியின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன.

குறிப்பாக, சுனாமியால் பாதிக்கப்பட்ட - மருதமுனை மூன்றாம் பிரிவிலுள்ள மஸ்ஜிதுல் இஸ்லாம் பள்ளிவாயல் பகுதியில் குடியேறியுள்ளவர்களின் குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தில் முழுவதுமாக மூழ்கியுள்ளன.

இங்கு சுமார் 40 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர் வசித்து வருகின்றனர்.

இதேவேளை, மருதமுனைப் பிரதேசத்திலுள்ள சுனாமி வீட்டுத் திட்டங்களான - பிரன்ச் சிற்றி மற்றும் 65 மீற்றர் வீட்டுத் திட்டங்களும் வெள்ள அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன.

இந்த நிலையில், இப்பகுதியிலுள்ள ராணுவத்தினர் - மாவட்ட செயலகத்துடன் இணைந்து, கிராம சேவகரின் ஒத்துழைப்புடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் விபரங்களைச் சேகரித்து வருகின்றனர்.

பாடசாலைகளில் தற்போது பரீட்சைகள் இடம்பெற்று வருவதன் காரணமாக, பரீட்சைகள் நிறைவடைந்ததும் - வெள்ளத்தால் இடம்பெயரும் குடும்பங்களை பாடசாலைகளில் அமர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக – விபரங்களைச் சேகரிக்கும் ராணுவத்தினர் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X