Janu / 2025 டிசெம்பர் 14 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
அகில இலங்கை மக்கள் திலகம் கலை கலாச்சார சமூக சேவை சங்கமும் கலைஶ்ரீ கலைமன்றமும் இணைந்து வழங்கும் "பாடுவோர் பாடலாம் ஆடுவோர் ஆடலாம்" மாபெரும் இசை நடன நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (19) அன்று பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு 11இல் உள்ள பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.
தினகரன், தினகரன் வாரமஞ்சரியின் ஊடக அனுசரணையுடன் நடைபெறும் இந்நிகழ்வில் தமிழ், முஸ்லிம், சிங்கள கலைஞர்களின் ஆடல்களும் பாடல்களும் இடம்பெறவுள்ளன.
இந்த நிகழ்வை ஆரம்பிப்பதற்கும் சிறப்பாக நடத்துவதற்கும் உதவியாக இருந்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் கலைஞருமான ஜோசப் பெர்ணாண்டோ, கொழும்பு கலாச்சார மன்றத்தின் பொருளாளரும் கலைஞருமான M. N. M. நசார், ஊடகவியலாளரும் கலைஞருமான கே. ஈஸ்வரலிங்கம் ஆகிய மூன்று பிரமுகர்களும் இங்கு கௌரவிக்கப்படவுள்ளனர்.
அத்துடன் மேலும் பல கலைஞர்களும் ஊடகவியலாளர்களும் இங்கு கௌரவிப்படவுள்ளனர்.

1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago