2025 டிசெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளைப் புறாவை திருடிய ஊழியர் கைது

Editorial   / 2025 டிசெம்பர் 14 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்ற உத்தரவின் பேரில் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த ஒரு வெள்ளைப் புறாவை, விலங்குகளுக்குப் பொறுப்பான ஊழியர், புறா உணவுடன் மிருகக்காட்சிசாலைக்கு அருகிலுள்ள சாலையில், எடுத்துச் சென்றுக்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் இது தொடர்பாக தெஹிவளை பொலிஸில் புகார் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளையிலுள்ள கௌடான பகுதியைச் சேர்ந்தவர், சுமார் 37 வயதுடையவர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக மிருகக்காட்சிசாலைத் துறையில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த நபர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X