Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 நவம்பர் 25 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அக்ரைப்பற்று கடற்கரைப் பிரதேசத்தில் கடந்த ஆறாம் திகதி மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பு ராகமை பிரதேசத்தை சேர்ந்த நான்கு பிள்ளையின்
தந்தையான சித்தவைத்தியர் எம்.எஸ்.மொஹமட் ரியாஸ் (57 வயது) என்பரே அவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணமாகியவர் கடந்த ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி ராகமை பிரதேசத்தில் உள்ள இவரது வீட்டில்வைத்து இனம் தொரியாத குழு ஒன்றினால் கடத்தி செல்லப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த ஆறாம் திகதி அக்கரைப்பற்று பதூர்நகர் கடற்கரைப் பிரதேசத்தில் இவரது சடலம் கரையொதுங்கியது. மீட்கப்பட்ட சடலம் அiடாளம் காணப்படாமல் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே இன்று காலை ராகமை பிரதேசத்தை சேர்ந்த மரணமாகியவரின் மகனான மொஹமட் றிசான் தனது தந்தையை அடையாளம் காட்டினார். குறித்த சடலம் அடையாளம் காட்டப்பட்டதால் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதேவேளை சடலமாக மீட்கப்பட்டவர் கடத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago