2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

அனர்த்த முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு செயலமர்வு

Kogilavani   / 2012 நவம்பர் 08 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் பொதுநல அமைப்பின் பிரதிநிதிகளுக்குமான அனர்த்த முன்னெச்சரிக்கை தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு நேற்று புதன்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்செயலமர்வில் அனர்த்தங்கள் ஏற்படும்போது அதிலிருந்து பாதுகாப்பு பெறுவது எவ்வாறு? அதற்குரிய ஆயத்தங்களை எவ்வாறு மேற்கொள்வது? என்பது தொடர்பாக வளவாளர்களினால் விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் சீ.முகுந்தன், உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத், நீர்பாசன திணைக்களத்தின் பொறியியலாளர் ஈ.சிறிநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .