2021 ஜனவரி 27, புதன்கிழமை

கூட்டெரு பிரயோக வயல் விழா

Kogilavani   / 2012 நவம்பர் 09 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கூட்டெரு பிரயோக வயல் விழா நேற்று வியாழக்கிழமை காரைதீவு கமநலசேவை மத்திய நிலைய பிரதேசத்தை சேர்ந்த வளைந்தவட்டை கிழக்கு வயல் பிரதேசத்தில் இடம்பெற்றது.

இலங்கையில் நஞ்சற்ற உணவு உற்பத்தியினை அதிகரிக்கும்; வகையில் வயல் நிலங்களுக்கு இரசாயன உரத்தினை பயன்படுத்துவதனை தவிர்த்து விவசாயிகள் மத்தியில் சேதன பசளை பாவனையை ஊக்குவிக்கும் வகையில் 'வளமான மண் வளமான நாடு' என்ற திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

காரைதீவு விவசாய போதனாசிரியர் எஸ்.தவநேசன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயராஜன், சம்மாந்துறை வலய உதவி விவசாய பணிப்பாளர் பீ.கே.பி. முத்துக்குமார், அட்டாளைச்சேனை வலய உதவி விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர், இத்தாலிய தன்னார்வு ஐ.ஸி.ஈ.ஐ. ஓவசீஸ் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் எச்.எம்.எம்.டில்சாத், சாய்ந்தமருது விவசாய போதனாசிரியர் எம்.எம்.எம்.ஜெமீல், நிந்தவூர் விவசாய போதனாசிரியர் எம்.வை.எம்.நியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .