2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

சுயதொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு

Kogilavani   / 2012 நவம்பர் 09 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு இன்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலக சமூகப் பராமரிப்பு மைய கட்டிடத்தில்   நடைபெற்றது.

விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சின் ஏற்பாட்டில் விதாதா தகவல் பரிமாற்று மாற்றீட்டுப் பயிற்சி திட்டத்தின் கீழ் இப்பயிற்சி செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.

இச்செயலமர்வில், பல்வேறு சுயதொழில் முயற்சிகள் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன் வீட்டிலிருந்த நிலையில் அதிக வருமானம் ஈட்டிக் கொள்ளக்கூடிய அப்பியாசக் கொப்பிகள், நாட்குறிப்பேடுகள், போன்றவற்றை இலகுவான முறையில் தயாரிக்கக் கூடிய செயன்முறைப் பயிற்சிகள் என்பன வளவாளர்களினால் வழங்கப்பட்டன.

விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர் எல்.அஸ்வர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வளவாளர்களாக சம்மாந்துறைப் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப்,  விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சின் பயிற்றுவிப்பாளர் தனுஸ்க, நிகழ்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.எம்.றியால், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.எம்.இதிரீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .