2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

கிழக்கு மாகாண கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு: கல்வி அமைச்சர்

Super User   / 2012 நவம்பர் 12 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

 
தயட்ட கிருள்ள தேசிய அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தின் கல்வித் துறைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அதிகளவிளான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதன் மூலம் கூடுதலான அபிவிருத்தி வேலைகள் இடம்பெற்று வருகின்றது. இது இந்த மாகாணத்துக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்ட தேசிய பாடசாலையான டீ.எஸ். சேனாநாயக்கா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்ற அதிபர்கள், ஆசியர்கள் மற்றும் மாணவர்களுக்கான சகவாழ்வு நற்புறவு சந்திப்பு நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொலைத்தொடர்பு அமைச்சரும் தயட்ட கிருள்ள திட்டத்தின் தலைவருமான ரஞசித் சியம்பலாபிட்டிய தலைமையில் இடம்பெற்ற் இந்நிகழ்வில்; கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசானாயக, அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, பி.எச். பியசேன, ஸ்ரீறியானி விஜய விக்ரம,  மாவட்ட செயலாளர் நீல் டீ அல்விஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 
இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களின்  கலை கலாச்சார நிகழ்வுகள் நடைபெற்றதுடன் மாணவர்களின் நட்புறவை வலுப்படுத்தும் முகமாக பாடசாலைக்கு இசைக்கருவிகளும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .