2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

நாவிதன்வெளி முத்துமாரி அம்மன் கோயிலில் காணாமல் போன பொருட்கள் மீட்பு

Super User   / 2012 நவம்பர் 14 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


நாவிதன்வெளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயிலில் கடந்த 2009 ஆம் ஆண்டு காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் பொருட்களை சவளக்கடை பொலிஸார் இன்று புதன்கிழமை மீட்டுள்ளனர்.

சவளக்கடை பிரதேச சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களுக்கு கிடைத்த இரகசிய தகவல் சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எஸ்.பத்திரனவின்; கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாகவே இன்று வியாழக்கிழமை கோயிலில் காணமல் போன பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

15ஆம் கொளணி விழாவடி உள் வீதி வயல் வெளியில் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே வெண்கலத்திலான குத்து விளக்குகள், விளக்குகள், அறிக்கிமிலா போன்ற பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .