2021 ஜனவரி 27, புதன்கிழமை

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக நிசாம் மீண்டும் நியமனம்

Super User   / 2012 டிசெம்பர் 31 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி)

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக எம்.ரீ.நிசாம் நியமிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவி செயலாளராக தற்போது கடமையாற்றும் நிசாமே மாகாண கல்வி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய தனது கடமைகளை நிசாம் நாளை செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார்.

ஏற்கனவே கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய நிசாம், மாகாண ஆசிரிய இடமாற்றத்தினால் ஏற்பட்ட சர்ச்சையினை அடுத்து கிழக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு இடமாற்றப்பட்டார்.

இந்நிலையிலேய மீண்டும் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக எம்.ரீ.நிசாம் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான நிசாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொது  செயலாளர் எம்.ரீ.ஹசன் அலியின் சகோதரருமாவார்.

  Comments - 0

  • Jawahir Saly Monday, 31 December 2012 06:17 PM

    கிழக்கு மாகாண கல்வியமைச்சில் இப்போதுதான் சரியான, நியாயமான நியமனம் ஒன்று வழங்கப்படுள்ளது. அநியாயம் செய்யப்பட்ட ஒருவர் அதைப்பற்றிக் கவலைப்படாமல் மாகாணக்கல்வி முன்னேற்றத்திற்காக செயற்பட்டதற்குரிய பரிசை இறைவன் வழங்கியுள்ளான். இன்னும் மாகாணத்தில் நியாயம் இருக்கிறது என்பதில் ஒரு மகிழ்ச்சி .
    Nizam sir, உங்களுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .