2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கார் மோதியதில் ஒன்பது பேர் காயம்

Editorial   / 2025 டிசெம்பர் 23 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெதர்லாந்தில் பொது மக்கள் மீது கார் ஒன்று மோதியதில் 09 பேர் காயமடைந்துள்ளனர்.

நெதர்லாந்து நாட்டின் ஹெல்டர்லாந்து மாகாணம் நன்ஸ்பெட் பகுதியில் உள்ள வீதியில் திங்கட்கிழமை (22)  இரவு கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணிவகுப்பு நடைபெறவிருந்தது.

இந்த அணிவகுப்பை காண ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். அப்போது, வீதியில் வேகமாக வந்த கார் அங்கு கூடியிருந்த மக்கள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் 9 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற பொலிஸார், காயமடைந்த 9 பேரையும் மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அதேவேளை, காரை ஓட்டிய நன்ஸ்பெட் பகுதியை சேர்ந்த 56 வயது மூதாட்டியிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X