2021 ஜனவரி 27, புதன்கிழமை

புதிய கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2013 ஜனவரி 02 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனிபா)

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி வங்கி மற்றும் சமுர்த்தி மகாசங்கம் என்பவற்றின் புதிய கட்டிடத்துக்குரிய அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட செயலாளர் நீல் டி அல்வீஸ், அம்பாறை மாவட்ட உதவி சமுர்த்தி ஆணையாளர் அனுறுத்த பியதாச, உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் எம்.பி.எம்.ஹூசைன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஐந்து மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்வுள்ள இக்கட்டிடத்தில் அஸ்ஸிறாஜ் சமுர்த்தி வங்கி மற்றும் சம்மாந்துறை சமுர்த்தி மகா சங்கம் என்பன இயங்கவுள்ளதாக இதன்போத தெரிவிக்கப்பட்டது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .