2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

அம்பாறையில் தானிய உற்பத்திகளை அதிகரிக்க அரசாங்கம் உதவும்: மஹிந்த யாப்பா

Menaka Mookandi   / 2013 ஜனவரி 05 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


அம்பாறை மாவட்டத்தில் நெல் மற்றும் ஏனைய தானிய பயிர்களின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான உதவிகளை அரசாங்கம் வழங்கும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

இலங்கையில் அதிகளவு நெல் உற்பத்தியில் ஈடுபடும் மாவட்டங்களில் அம்பாறை மாவட்டம் முக்கியமானது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

விவசாய அபிவிருத்தி சம்பந்தமான வெளிக்கள விஜயமொன்றினை மேற்கொண்டு அமைச்சர் மஹிந்த யாப்பா இன்று சனிக்கிழமை அம்பாறை மாவட்டத்துக்கு வருகை தந்திருந்தார். இதன்போது, அட்டாளைச்சேனை உதவி விவசாயப் பணிப்பாளர் காரியாலயத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட விடயத்தினைத் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட உதவி விவசாயப் பணிப்பாளர் எம.;எஸ். அஹமட் சனீர் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றும் போது, அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள உதவி விவசாயக் காரியாலயத்தினை விரிவுபடுத்தி, வளப்பற்றாக்குறைகளை தீர்த்து வைப்பதாகவும் உறுதியளித்தார்.

இக் கூட்டத்தில், இக் கூட்டத்தில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன, கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, விவசாய அமைச்சின் செயலாளர் டப்ளியு. சக்கல சூரிய, விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர் அமீதியாகொட மற்றும் விவசாய அமைச்சு, திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தினையடுத்து, விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை விவசாயக் காணிகள் அமைந்துள்ள இடத்துக்கு அழைத்துச் சென்ற கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை – அட்டாளைச்சேனைப் பிரதேச விவசாயிகள் எதிர்கொள்ளும் நீர்ப்பாசனப் பிரச்சினைகள் குறித்தும், அவற்றினை நிவர்த்தி செய்ய வேண்டிய அவசியம் குறித்தும் விளக்கமளித்தார்.
                  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .