2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

முஸ்லிம் மீடியா போரத்தின் மாநாட்டை கிழக்கில் நடத்த கோரிக்கை

Super User   / 2013 பெப்ரவரி 12 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2013ஆம் ஆண்டுக்கான வருடாந்த மாநாட்டை கிழக்கு மாகாணத்தில் நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம் மற்றும் கொழும்பு உட்பட பல மாவட்டங்களை சேர்ந்த சுமார் 80 உறுப்பினர்கள் கையொழுத்திட்டு இந்த எழுத்து மூல கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இந்த கடிதம் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீனிடம் அண்மையில் இடம்பெற்ற போரத்தின் செயற்குழு கூட்டத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2012ஆம் ஆண்டுக்கான வருடாந்த மாநாட்டை கிழக்கு மாகாணத்தில் நடத்துவது வருடாந்த மாநாட்டில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும், அது நிறைவேற்றப்படவில்லை எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0

  • எம்.ஐ.பையாஸ் Tuesday, 12 February 2013 11:47 AM

    வரவேற்கத்தக்க விடயம் கொழும்பில்தான் நடாத்த வேண்டும் என்பதல்லதானே நாட்டில் ஒவ்வொரு இடத்திலும் நடத்துவது நல்லது என்பது எனது விருப்பமும் கூட...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X