2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

'மாகாண சபை முறைமையை ஒழிக்கும் திருத்தச் சட்ட மூலத்திற்கும் ஆதரவளிக்கப் போவதில்லை'

Kogilavani   / 2013 ஜூலை 23 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

'மாகாண சபை முறைமையை ஒழிக்கும் எந்தவொரு திருத்தச் சட்ட மூலத்திற்கும் தாம் ஆதரவளிக்கப் போவதில்லை' என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்பாசன அமைச்சரும் கிழக்கு மாகாண அமைச்சரவை வாரியத்தின் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

13ஆவது திருத்தச் சட்ட மூலத்தை எதிர்த்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினரும், கிழக்கு மாகாண சபையின் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீலினால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை தொடர்பில் அமைச்சரது கருத்தினைக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

'மாகாண சபை ஆட்சி முறையில் வலுவிறக்கம் செய்யப்படவோ அல்லது, மாகாண சபை முறைமையை ஒழிக்கவோ தாம் ஒரு போதும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை.

இதேவேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கும் நடவடிக்கைக்கும் தாம் ஒரு போதும் இணக்கம் தெரிவிக்கப் போவதில்லை.

தாம் அரசாங்கத்தின் பங்காளி கட்சி என்பதற்காக அரசாங்கம் கொண்டுவரும் எல்லா விடயங்களுக்கும் ஆதரவு வழங்க வேண்டும் என்பதற்கில்லை.

இதற்கு நல்ல உதாரணமாக கடந்த கிழக்கு மாகாண சபை ஆட்சிக் காலத்தின் போது அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட நாடு நகர சட்ட மூலத்திற்கு தமது எதிர்ப்பினை தெரிவித்திருந்தமையினை இங்கு நினைவு படுத்த விரும்புகின்றேன்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்காக கொண்டு வரப்பட்ட மாகாண சபை ஆட்சி முறைமை இன்னும் இந்த மாகாணங்களில் முறையாக அமுல் படுத்தப்படாத நிலையிலையே இருந்து வருகின்ற இச்சந்தர்ப்பத்தில் அதனை குறைப்பதற்கும், இல்லாமல் செய்வதற்கும் நாம் ஒரு போதும் ஆதர வழங்கப்போவதில்லை.

யுத்தத்தினாலும், இயற்கை அனர்த்தங்களினாலும் அதிகளவில் பாதிக்கப்பட்ட மக்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்களேயாகும்.

கிழக்கு மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் மூலம் இன்று அடிப்படை வசதிகள், உட்கட்டுமான அபிவிருத்தி வேலைகள் மேற்கொண்டும் வருகின்றோம். எல்லாவற்றுக்கும் மேலாக இம்மாகாணததில் மூவின சமூகங்களும் ஒற்றுமையுடன் வாழ்வதற்காக அரும்பாடுபட்டு அதனை கட்டியெழுப்பி வருகின்றோம்' என்றார்.

  Comments - 0

  • AMBI Tuesday, 23 July 2013 05:15 PM

    உண்மையில் இவர் சொன்னால் செய்வார், ஸ்ரீலங்கா அறிக்கை காங்கிரஸ், போல சும்மா அறிக்கையை விட்டுக்கொண்டு இருக்க மாட்டார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X