2025 ஒக்டோபர் 30, வியாழக்கிழமை

10 கண்ணீர் புகைக்குண்டுகள் கொழும்பு-07 இல் மீட்பு

Editorial   / 2025 ஒக்டோபர் 30 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரகலய காலத்தில் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கண்ணீர் புகைக்குண்டு 10 அடங்கிய பை, கொழும்பு-07, சேர் ஏனஸ் டி சில்வா மாவத்தையில் உள்ள  கட்டடமொன்றின் கூரையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக கறுவாத்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர்.  

உணவு வகையை பொதிச்செய்யும் ஒரு பையில் இருந்தே இவை மீட்கப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டு பிரதமர் அலுவலகம் அருகே போராட்டக்காரர்கள் நடத்திய போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினரால் கண்ணீர் புகைக்குண்டுகள், போராட்டக்காரர்களின் கைகளில் விழுந்து வீசப்பட்டபோது இந்தக் கட்டிடத்திலேயே இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கண்ணீர் புகைக்குண்டுகள் அடங்கிய உணவு வகை பை வெயில் மற்றும் மழையின் தாக்கத்தால் சிதைந்துவிட்டதாக பொலிஸ்  விசாரணையில் தெரியவந்துள்ளது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X