2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

நிரந்தர நியமனம் வழங்கள்

Kogilavani   / 2013 ஜூலை 27 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


அம்பாறை மாவட்டத்தில் பட்டதாரி பயிலுனர்களாக இணைக்கப்பட்டு சமுர்த்தி முகாமையாளர்களாக கடமையாற்றி வந்த 32 பேருக்கு நேற்று வெள்ளிக்கிழமை நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.

சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் அனுரத்த பியதாச தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர், காணி உதவி ஆணையாளர், மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் உட்பட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஒரு வருடகாலமாக பயிலுனர் பட்டதாரிகளாக கடமையாற்றி வந்த இவர்கள் நிரந்தர நியமனம் கிடைக்கப் பெற்றதனையிட்டு ஜனாதிபதிக்கும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மற்றும் சமுர்த்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கும் நன்றியினை தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .