2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

கமநல சேவை மத்திய நிலையத்தை புனரமைக்க கோரிக்கை

Kogilavani   / 2013 ஜூலை 30 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்


பாரிய சேதங்களுக்கு உள்ளாகி வரும் நாவிதன்வெளிப் பிரதேச கமநல சேவை மத்திய நிலையத்தை புனரமைத்து தருமாறு விவசாய அமைப்புக்கள் கோரிக்கை விடுக்கின்றன.

நாவிதன்வெளிப் பிரதேசத்தில் சுமார் 30வருடங்கள் பழமைவாய்ந்த இந்த அலுவலகமானது கடந்த காலங்களில் எவ்வித புனரமைப்புக்களும் செய்யப்படாத நிலையில் சேதமுற்று வருவதாக இப்பிரதேச விவசாய அமைப்புக்கள் குறிப்பிடுகின்றன.

இவ் அலுவலகத்தின் மேற்பார்வையிலேயே இப்பிரதேசத்தின் சுமார் 12,000ஏக்கர் நெல் மற்றும் மேட்டுநில
பயிர்ச்செய்கைக்கான காணிகள் காணப்படுவதாகவும் இதன்மூலம் இப்பிரசேத்தில் சுமார் 1500  விவசாயக் குடும்பங்கள் பயன்பெறக் கூடிய நிலை காணப்படுவதாகவும் அலுவலக அதிகாரகள் குறிப்பிடுகின்றனர்.

எனவே சேதத்திற்குள்ளாகி வரும் கட்டிடத்தை புனரமைத்றுதுத்தர, பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் முன்வரவேண்டும் என்பதே விவசாய அமைப்புக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதேவேளை இக்கட்டிட இடிபாட்டுகளுக்கு மத்தியிலும் இங்கு பல உத்தியோகத்தர்கள் கடமையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--