2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

திரிய பியச வீடுகள் கையளிப்பு

Super User   / 2013 ஜூலை 30 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

சமுர்த்தி அதிகார சபையினால்  சமுர்த்தி பெறும் வறிய குடும்பங்களுக்;கென நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட திரிய பியச வீடுகள் நேற்று திங்கட்கிழமை  திறந்துவைக்கப்பட்டன.

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்  சிரேஷ்ட அமைச்சர் பி.தயாரத்ன, நாடாளுமன்ற உறுப்பினரும் பி.எச்.பியசேன, நாவிதன்வெளி பிரதேச சபை உதவி தவிசாளர் ஏ.ஆனந்தன், உறுப்பினர் ஏ.சுதர்சன், மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் வி.சிறிநாதன் உட்பட  பலர் கலந்துகொண்டனர்.

நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி அதிகார சபையினால் சமுர்த்தி பெறும் வறிய குடும்பங்களுக்;கென 8 திரிய பியச வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--