2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

இந்துமத பிரதிநிதி ஸ்ரீ ரவிக்குமார் ஜீ காரைதீவுக்கு விஜயம்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.ரி.சகாதேவராஜா


உலகளாவிய ரீதியில் இந்து மதத்தின் பெருமைகள் பற்றி பரப்புரை செய்துவரும் இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் சர்வதேச இணை இணைப்பாளரான இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீ ரவிக்குமார் ஜீ இன்று வியாழக்கிழமை காலை காரைதீவுக்கு விஜயம் செய்;தார்.

அவருடன் இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஸ்ரீ இராதாகிருஸ்ணன் ஜீயும் வருகை தந்திருந்தார்.

காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கமும் இந்து ஸ்வயம் சேவக சங்கமும் இணைந்து இவ் ஏற்பாட்டைச் செய்திருந்தது. கொடியேற்றத்துடன் மாணவர்களின் பஜனையும் இடம்பெற்றது. குரு பூஜையும் நடைபெற்றது.

இங்கு சொற்பொழியாற்றிய அவர்,

'உலகில் இந்துமதத்தின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. உலகில் சாதனையாளர்கள் வெற்றி பெற்றவர்களுள் பெரும்பாலானோர் இந்துமதம் காட்டிய யோகாசனத்தைக் கடைப்பிடித்தவர்களாவர். இன்று மேலை நாடுகளில் யோகா பாரிய செல்வாக்கு செலுத்திவருகிறது.

நம்மவர்களில் பெரும்பாலானோர் குறைந்த நேரம் வேலைசெய்து கூடிய நேரம் ஓய்வெடுப்பவர்களாகவுள்ளனர். அதனால் சோம்பேறிகளாகின்றனர். அத்துடன் நோய்களையும் இழுத்துக்கொள்கிறார்கள்.

ஆனால் யோகா செய்பவர்கள் குறைந்த நேரத்தில் ஓய்வெடுத்து கூடிய நேரம் வேலைசெய்கிறார்கள். யோகாவிற்குரிய விசேட குணம் அது' என்றார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--