2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

யானை தாக்கி பெண் படுகாயம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 22 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி, வீரச்சோலை பிரதேசத்தில் வீதியால் சென்றுகொண்டிருந்த  பெண் ஒருவரை யானை தாக்கியதில் அவர் படுகாயமடைந்துள்ளதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வீரச்சோலை கிராமத்தைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தாயான தம்பையா லெட்சுமி (வயது 48) என்பவரே யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை  காலை 06 மணியளவில் வீட்டிலிருந்து மல்வத்தை பிரதேசத்தில் உள்ள விவசாய பண்ணைக்கு வேலைக்கு சென்றுகொண்டிருந்தபோதே, இவர் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

யானையின் தாக்குதலில்  படுகாயமடைந்த இந்தப் பெண்ணை வீதியால் வந்தவர்கள் சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க நேற்று திங்கட்கிழமை இரவு  சொறிக்கல்முனை பிரதேசத்தினுள் புகுந்த யானை வீடு ஒன்றிலிருந்த  நெல்மூடைகளை  நாசப்படுத்தியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--