2025 ஒக்டோபர் 29, புதன்கிழமை

JMSDF AKEBONO’’ கப்பலுக்கான விஜயத்தின் போது இருதரப்பு ஒத்துழைப்பு

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 29 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள ஜப்பானிய கடற்படைக் கப்பலான 'JMSDF AKEBONO' பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோர் செவ்வாய்க்கிழமை( 28) அன்று பார்வையிட்டனர்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, ஜப்பானிய கடல்சார் சுய பாதுகாப்புப் படை (JMSDF)கப்பலான AKEBONO (DD 108) செவ்வாய்க்கிழமை( 28) அன்று காலை இலங்கையை வந்தடைந்தது.

இந்த கப்பலுக்கு வருகைதந்த பிரமுகர்களை இலங்கைக்கான ஜப்பானிய தூதர் மேதகு அகியோ இசொமடா (Akio ISOMATA)மற்றும் கப்பலின் கட்டளை அதிகாரிகொமாண்டர் அராய் கட்சுடோமோ (ARAI Katsutomo)ஆகியோர் அன்புடன் வரவேற்றனர்.

கப்பலில் நேற்று மாலை நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான Dr. அனில் ஜயந்த கலந்து கொண்டார்.

கௌரவ அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றிய பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் ஜயசேகர (ஓய்வு), இலங்கையின் கடல்சார் மற்றும் கடலோர காவல்படை திறன்களை மேம்படுத்துவதில் ஜப்பான் அரசாங்கம் வழங்கிய தொடர்ச்சியான ஆதரவிற்கும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற நாடுகடந்த குற்றங்ச் செயல்களை எதிர்த்துப் போராடுவதற்கும் வழங்கிய உதவிக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.

கடல்சார் கண்காணிப்பு மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அதிகாரப்பூர்வ பாதுகாப்பு உதவி (OSA) திட்டத்தின் கீழ் அண்மையில் ஜப்பான் வழங்கிய 500 மில்லியன் யென் மதிப்புள்ள மேம்பட்ட ஆளில்லா வான்வழி விமானத்தின் (UAV)முக்கியத்துவத்தை பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கையின் வானிலை, கடல்சார் சட்ட அமலாக்கம் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு முயற்சிகளை மேம்படுத்துவதில் JICA மற்றும் UNODC மூலம் ஜப்பானின்  கூட்டாண்மையை அவர் பாராட்டினார்.

மே மாதம் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மற்றும் இலங்கை ஜனாதிபதியின் ஜப்பானுக்கான அரச விஜயம் உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான சமீபத்திய உயர்மட்ட ஈடுபாடுகளை நினைவு கூர்ந்த பிரதி அமைச்சர்  இவ் விஜயங்களின் போது பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கவும் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதையும் நினைவு கூர்ந்தார்.

பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பகிரப்பட்ட செழிப்பை உறுதி செய்வதற்கு இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான கடல்சார் கூட்டாண்மை அவசியம் என்று பிரதி அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் முப்படைத் தளபதிகள், ஜப்பானிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், இராஜதந்திரிகள் மற்றும் பல சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X