2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

கிட்டங்கி வாவியில் முதலைகளின் பெருக்கம் அதிகரிப்பு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 22 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


அம்பாறை சேனைக்குடியிருப்பு கிட்டங்கி வாவியில் முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுபவதாகவும் இதனால், வருடந்;தோறும் சுமார் 7 மனித உயிர்கள் காவு கொள்ளப்படுவதாகவும் கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யூ.கபார் தெரிவித்தார்.

இம்முதலைகளால், உயிர்கள் காவு கொள்ளப்படுவதை தடுத்து நிறுத்தும் பொருட்டு கல்முனை பொலிஸ் நிலையமும், சேனைக்குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு வேலைத்திட்டம் திங்கட்கிழமை (21) கிட்டங்கி பிள்ளையார் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யூ.கபார், பொலிஸ் பிரிவு நீச்சல் உயிர்காப்பு சேவை பயிற்றுனர்களான ஏ.ரி.அசங்க, விஜயகோன், சேனைக்குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் எஸ்.செல்வராஜ், உப தலைவர் திருமதி அன்னம்மா சௌந்தரராஜா, கிராம உத்தியோகத்தர்கள் உட்பட பொதுமக்கள், இளைஞர்கள் என மேலும் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பொதுமக்கள் குளிக்கும் இடத்தில் நீராடுவதற்கு பொருத்தமற்ற இடம் எனக் குறிக்கப்பட்ட பெயர்பலகை காட்சிப்படுத்தப்பட்டதுடன், கலந்து நடத்தப்பட்டது காண்பிக்கப்பட்டது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--