2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பாடசாலை விடுமுறையில் திருத்தம்

Editorial   / 2025 டிசெம்பர் 23 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2025 கல்வியாண்டு 2025 டிசெம்பர் 22 திங்கட் கிழமையுடனும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2025 டிசெம்பர் 26 வெள்ளிக் கிழமையுடனும் நிறைவடைகின்றன.

அதற்கமைய, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு 2025.12.23 முதல் 2026.01.04 வரையும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2025.12.27 முதல் 2026.01.04 வரையும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

2026 கல்வியாண்டின் முதலாம் தவணையின் முதலாம் கட்டத்திற்காக அனைத்து பாடசாலைகளும் 2026 ஜனவரி 05 திங்கட்கிழமை அன்று ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் 2026 கல்வியாண்டின் முதலாம் தவணை எனது சம இலக்க மற்றும் 2025.12.09 கடிதத்திறகமைவாக நடைமுறைப்படுத்தப்படும்.

இத்தோடு, 2026 ஆண்டிற்கான இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகள் 2025.09.11 திகதியிடப்பட்ட சமஇலக்க 30/2025 தவணைகள் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் , பரீட்சைதிணைகளத்தால் 2026 சுற்று நிருபத்திற்கமைய பரிந்துரைக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் பரீட்சை நடாத்தப்படும் தினங்களில் மாற்றங்கள் இல்லை. என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X