2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

சட்டவிரோதமாக மது விற்ற மூவருக்கு தண்டம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 24 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த மூவருக்கு 27,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்தேக நபர்கள் மூவரையும் அம்பாறை மாவட்ட நீதவான் துமிந்த முதுகொட்டுவ முன்னிலையில் நேற்று புதன்கிழமை ஆஜர்படுத்தியபோதே அவர் தண்டம் விதித்து தீர்ப்பளித்தார்.

இதற்கு முதல் தடவையும் குற்றம் செய்த மடவலந்தையைச் சேர்ந்தவருக்கு 15,000   ரூபாவும் ஏனைய இருவருக்கும் தலா 6,000 ரூபாவும்  தண்டம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் மடவலந்த, மாந்தோட்டம் ஆகிய பிரதேசங்களில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 3 பேரையும்   கடந்த வாரம் தமண பொலிஸார் கைதுசெய்தனர். 

இவர்களுக்கு எதிராக  நீதிமன்றத்தில் வழக்குத் தாக்குதல் செய்யப்பட்ட நிலையில், நேற்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு பொலிஸ் பிணையில் இவர்கள் விடுவிக்கப்பட்டனர் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--