2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

கோபுரத்தின் மீதேறி பிரதேச சபை உத்தியோகத்தர் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 28 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை மாவட்டத்தின் தமண பிரதேச சபை உத்தியோகத்தர் ஒருவர் இங்குராணை பிரதேச தனியார் தொலைத்தொடர்புக் கோபுரத்தின் மீதேறி  இன்று திங்கட்கிழமை (28) காலையிலிருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார்.

தனது மோட்டார் சைக்கிளின் எரிபொருள் செலவுக்கான பணத்தையும் சம்பளத்தையும் அதிகரிக்குமாறு கோரி மேற்படி தமண பிரதேச சபை உத்தியோகத்தர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருவதாக தமண பொலிஸார் தெரிவித்தனர்.

தமண பிரதேச சபையின் வருமான வரி உத்தியோகத்தராக கடமையாற்றும்  45 வயதுடைய ஒருவரே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார்.

வருமானவரி அறவீடு செய்வதற்காக மோட்டார் சைக்கிள் எரிபொருளுக்கு  வழங்கும் பணத்தை 3,500 ரூபாவிலிருந்து அதிகரிக்குமாறும்  தனது சம்பளத்தை அதிகரிக்குமாறும் தமண பிரதேச சபையின் வருமான வரி உத்தியோகத்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில்,  இந்த ஆர்ப்பாட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை  பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .