2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

இராணுவத்தினரால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கள்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 06 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கனகராசா சரவணன்
 
அக்கரைப்பற்று மூன்றாவது இராணுவ படை பிரிவு, மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் நற்குண முன்னேற்றத்துக்கான அமைப்பின் அனுசரணையுடன் அக்கரைப்பற்று கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தில் உள்ள 102 மாணவர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை காலையில் அதிபர் வெ.கனகரட்ணம் தலைமையில் இடம்பெற்றது. 
 
இவ் நிகழ்வில் அதிதிகளாக அக்கரைப்பற்று மூன்றாவது இராணுவ படை பிரிவின் அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஹரன் பெரேரா, மாவட்ட சிவில் இணைப்பாளர் கேணல் ஹரன் வீரசிங்க, திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் ஆர்.சகிர்தராஜன், நற்குண முன்னேற்றத்துக்கான அமைப்பின் முகாமையாளர் ஆனந்தஸெயவர்த்தன மற்றும் இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டு மாணவர்களுக்கான புத்தக பைககள், அப்பியாச கொப்பிகள், சப்பாத்து மற்றும் கற்றல் உபகரணங்கள் கொண்ட பொதிகளை வழங்கிவைத்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X