2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலைக்கு புதிய நிரந்தர வைத்திய அத்தியட்சகர்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 07 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ரவீந்திரன்
 
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையின் நிரந்தர வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் இராசரெட்னம் முரளீஸ்வரன் இன்று (07) கடமைகளைப் பொறுப்பேற்றார். 
 
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மருத்துவ சத்திரசிகிச்சைமானி (எம்.பி.பி.எஸ்) பட்டத்தை பெற்ற   இவர், மருத்துவ நிர்வாக முதுமானி (எம்.எஸ்.சி.மெடிக்கல் அட்மின்) பட்டத்தையும் பெற்றுள்ளார். 
 
நெல்லியடியை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வதிவிடமாகவும் கொண்ட டாக்டர் முரளீஸ்வரன், மட்டக்களப்பு சென். மைக்கல் பாடசாலையின் பழைய மாணவருமாவார். கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஏற்கனவே டாக்டர் ஜெகநாதன் (பாண்டிருப்பு), டாக்டர் அமரர் க.பரமானந்தம் (காரைதீவு), டாக்டர் ஞானகுமார் (காரைதீவு-யாழ்ப்பாணம்), டாக்டர் முருகானந்தம் (தம்பிலுவில்-பாண்டிருப்பு), டாக்டர் சா.ராஜேந்திரன் (காரைதீவு-கல்முனை), டாக்டர் ஜாபீர் (சம்மாந்துறை-காத்தான்குடி), டாக்டர் லங்காதிலக்க (அம்பாறை) ஆகியோர் பொறுப்பதிகாரிகளாக கடமையாற்றியுள்ளனர். 
 
வைத்தியர் இராசரெட்னம் முரளீஸ்வரன், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையிலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் ஏற்கனவே கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--