2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

தகாத வார்த்தை பேசியவருக்கு அபராதம்

Kanagaraj   / 2014 மார்ச் 26 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை நீதிமன்றத்தில் கடமையாற்றும்  பெண் முதலியார் ஒருவரிடம் தொலைபேசில் தகாத வார்த்தைகள் பேசிய 43 வயதுடைய ஒருவருக்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.ஜி.அலக்ஸ்ராஜா இன்று (26)  அபராதம் விதித்து எச்சரித்து விடுதலை செய்தார்.
முதலியாரிடம் மன்னிப்பு கோருமாறும் அவருக்கு நஷ்டஈடாக 50 ஆயிரம் ரூபாவும் தண்டப்பணமாக 1500ரூபாவும் செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

அம்பாறை நீதிமன்றத்தில் கடமையாற்றும் பெண்முதலியாரிடம் கல்முனைக்குடி 9;பிரிவு பெரியபள்ளி வாசல் வீதியைச் சேர்ந்த கட்டட ஒப்பந்தகாரன 43 வயதுடையவர் கடந்தவருடம் ஏப்ரல் மாதம் 17ம் திகதி தொலைபேசியில் தொடர்ந்து தகாதவார்த்தைகள் பேசியதையடுத்து முதலியார் அவருக்கு எதிராக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து குறித்த நபரை பொலஸார்  கடந்த மாதம் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவரை பிணையில் விடுவித்த நீதவான் இன்று 26ம் திகதி; ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
  நீதிமன்றத்தில் ஆஜரான அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து அவரை எச்சரித்து தண்டம் விதித்து விடுதலை செய்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .