2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள்

Kogilavani   / 2014 மார்ச் 28 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

இருபத்தைந்து ஆண்டுகளை கடந்து சென்றுள்ள கல்முனை அஸ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை இன்னும் பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கிவருவதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

வைத்தியசாலையின் உள்ளக வீதிகள் திறப்பு விழாவும், வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலும் புதன்கிழமை(26) வைத்திய அத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா, கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம் உள்ளிட்ட  பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் வைத்திய அத்தியட்சகர் நஸீர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'இவ்வைத்தியசாலையின் கட்டடத்தேவைக்காக மாத்திரம் ரூபா 329 மில்லியன் தேவைப்படுகின்றது. கதிரியக்க(எக்ஸ்றே) கட்டடத் தொகுதி மற்றும் நோயாளர்களுக்கான விடுதிகள், ஏனைய வசதிகளுக்கான கட்டங்கள் அமைக்கவேண்டியுள்ளன.

மேலும் லிப்ட் வசதிகள் இன்மையால் பல்வேறு அசௌகரியங்களுக்கும் ஆளாகி வருகின்றோம். இதேவேளை இவ்வைத்தியசாலைக்கு 141 சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதிலும் 45 சிற்றூழிகள் மாத்திரமே கடமையாற்றி வருகின்றனர். இவை தவிர நிரந்தர நிர்வாக உத்தியோகத்தர் ஒருவர் நியமனம் செய்யப் படாமையும் பல நிருவாகச் சிக்கல்களுக்கு ஆளாகி வருகின்றோம்.

இவ்வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள பௌதிக வளப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டிக் கொள்வதோடு சுகாதார அமைச்சரையும் அழைத்து வந்து இவ்வைத்தியசாலை எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகளை கண்டறிய உதவுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்' என இதன்போது தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .