2021 மார்ச் 01, திங்கட்கிழமை

கல்முனை ஸாஹிரா மாணவர்கள் சாதனை

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 04 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த.சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் 7 மாணவர்கள்  9 பாடங்களிலும் ஏ சித்திபெற்றிருப்பதுடன் முதன் முறையாக ஆங்கில மொழி மூலம் தோற்றிய சகல மாணவர்களும் ஒரு மாணவனுக்கு 9 ஏ உட்பட சித்தியடைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் 9 மாணவர்கள் 8 பாடங்களிலும், 11 மாணவர்கள் 7 பாடங்களிலும், 10 மாணவர்கள் 6 பாடங்களிலும், 7 மாணவர்கள் 5 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றிருப்பதுடன் பெரும் தொகையான மாணவர்கள் க.பொ.த.உயர்தரம் கற்பதற்கும் தகுதி பெற்றுள்ளனர்.

எம்.என்.நிபால், ஜே.ஐ.அஹமட் ஸஹ்ரி, ஏ.ஆர்.ஆதிப் முஹம்மட், ஏ.நிஜாத், எம்.ஏ.அஜிமுசான், ஏ.எம்.சஸ்னி, கே.எம்.அகீல் ஆகிய மாணவர்கள் 9 பாடங்களிலும் யு.எம்.ஏ.சிஹாப்  ஏ.ஏ.சரோத், ஏ.ஜே.எம்.டில்சாத், எம்.எஸ்.ஏ.அனூப், ஐ.எம்.வாஸீல், எம்.எம்.ஆபித் அஹமட், ஏ.சாத் அஹமட், ஆர்.எஸ்.ஆகில், எம்.எச்.எம்.அம்ஜத் ஆகிய மாணவர்கள் 8 பாடங்களிலும் இ எம்.ஏ.ஆர்.எம்.மீஸால், பீ.எம்.சப்ராஸ், எஸ்.எம்.அஸலம் ஸஹீல், ஏ.என்.எம்.சராப், எம்.எஸ்.எம்.மிஸ்தாஸ், ஏ.எம்.அஸால் இலாஹி, யு.எம்.எம்.சயீட், ஏ.ஜே.எம்.மஸீன் அனாப், எம்.என்.ஏ.நுஸ்கி, ஏ.ஜி.ஏ.றஹ்மான், இஸட்.எம்.ஸஹீல்  ஆகியோர் 7  பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.

சித்தியடைந்த மாணவர்களுக்கும், பகுதித்தலைவர்களுக்கும், முன்னாள் அதிபருக்கும், பிரதி, உதவி அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0

 • sivanathan Friday, 04 April 2014 10:27 AM

  திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் 18 மாணவிகள் 9 பாடங்களில் ஏ சித்தியினைப் பெற்றுள்ளார்கள்.

  Reply : 0       0

  Kalmunai Green City Saturday, 05 April 2014 11:13 AM

  வாழ்த்துக்கள்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .