2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

திருடிய மோட்டார் சைக்கிளுடன் பயணித்த இருவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 07 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் சவளக்கடை பிரதேசத்தில் மதுபோதையில் பயணித்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவரை 14 நாட்களுக்கு  விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான்  அந்தோனி யூட்சன் ஞாயிற்றுக்கிழமை (06) உத்தரவிட்டார்.

நாவிதன்வெளி கமநலசேவைகள் திணைக்களத்தின் முன்பாகவுள்ள சந்தியில் சனிக்கிழமை (05) சோதனையில் ஈடுபட்ட சவளக்கடை போக்குவரத்து பொலிஸார், மோட்டார் சைக்கிளொன்றில் பயணித்த 28 மற்றும் 27 வயதான இவ்விருவருக்கும் சமிக்ஞை காட்டினர். இருப்பினும், இவர்கள்  மோட்டார் சைக்கிளை நிறுத்தாது சென்றனர்.

இதனையடுத்து, நிறுத்தாது வந்த இம்மோட்டார் சைக்கிளை  வீதியின் அடுத்த பொலிஸ் வீதிச் சோதனையான சவளக்கடை சந்தியில் வீதிச்சோதனை சாவடியில்  பொலிஸார் இடைமறித்தனர்.

இதன்போது இவ்விருவரும் மதுபோதையில் காணப்பட்டமை தெரியவந்ததுடன், மோட்டார் சைக்கிளுக்கான எவ்வித ஆவணங்களும் இவர்களிடம் காணப்படவில்லை.

இந்நிலையில் இவ்விருவரையும்  பொலிஸார்; கைதுசெய்ததுடன்,  மோட்டார் சைக்கிள் இலக்கத்தை சகல பொலிஸ் நிலையங்களுக்கும்  பொலிஸார் தெரியப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து,  களுவாஞ்சிக்குடியில்;  ஜனவரி மாதம் 4ஆம் திகதி திருட்டுப் போன  மோட்டார் சைக்கிள் இதுவெனத் தெரியவந்துள்ளது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .