2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

கைத்தொழில் துறைகள் மேம்பாடு

Super User   / 2014 ஏப்ரல் 09 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகள்   அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை   கொழும்பு இல்லத்தில் புதன்கிழமை (09) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நிசாந்த தலைமையிலான இக்குழுவினர் அப்பகுதி மக்களின் பொருளாதார நிலைமையினை மேம்படுத்தும் வகையில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறைகளை அப்பகுதியில் விரிவுபடுத்துவது மற்றும் மேம்படுத்துவது தொடர்பிலும் பனைசார் உற்பத்திகளை ஊக்குவிப்பது தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளனர்.

இவ்வாறான கைத்தொழிற்துறைகளை அப்பகுதிகளில் விரிவாக்கம் செய்வது தொடர்பில் ஆராயும் முகமாக அப்பகுதிக்கு நேரில் வருமாறு பிரதிநிதிகள் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெகுவிரைவில் அப்பகுதிக்கு வருகைதந்து வளநிலைமைகளை ஆராய்ந்து அப்பகுதியில் தனது அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படக்கூடிய கைத்தொழிற்துறைகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--