2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

தென்கிழக்கு பல்கலைக்கு ஜனாதிபதி ஞாயிறு விஜயம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா ,எம்.சி. அன்சார்


தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 20ம் திகதி நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக  கலந்து கொள்ளவுள்ளதாக தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயீல் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் வருகை தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (13) தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பதிவாளர் ஏ.எச்.ஏ.சத்தார், உதவிப் பதிவாளர் எம்.எச்.நபார், கலை கலாசார பீடாதிபதி எம்.ஏ.ஜப்பார், விரிவுரையாளர்களான கே.எம்.முபாரக், எம்.ஏ.எம்.சமீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உப வேந்தர் இஸ்மாயீல் தொடர்ந்து உரையாற்றுகையில்

ஜனாதிபதி அவர்கள் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்து மாணவர்களுக்கு கற்றலுக்க ஏற்ப பொருத்தமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கம் நோக்குடன் தென் கிழக்க பல்கலைக் கழகத்தின் ஒலுவில் வளாகத்தில் சுமார் 360 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்கள் திறந்து வைக்கப்படவுள்ளதாகவும் ,

எதிர்வரும் 20ம் திகதி காலை 10.30 மணிக்கு தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஒலுவில் வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய அஷ்ரப் ஞாபகாத்த நூலக கட்டடத்தினையும், வர்த்தக முகாமைத்துவ பீடத்தக்கான கட்டடத்தினையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைக்கவுள்ளதுடன் அதனைத் தொடர்ந்து சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தில் மாணவர்களுக்கான விடுதிக்கட்டிடத்துக்கான அடிக்கல்லும் நடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உயர்கல்வி அமைச்சர்களான எஸ்.பி.திசாநாயக்க, உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, நீதி அமைச்சர் றவூப் ஹக்கீம் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட உள்ளூர் அரசியல் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--