2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

விபத்தில் இளைஞன் பலி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதான வீதியில் திங்கட்கிழமை (14)பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சாய்ந்த மருதைச்சேர்ந்த இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

 இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இவ்விபத்தினால் காயடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாய்ந்த மருதூரைச்சேர்ந்த ஏ.சாஜகான் வயது (26) என்ற இளைஞர் மரணமடைந்தாகவும், மற்ற நபரான எஸ்.புவிதரன் (28) சிகிச்சை பெற்று வருவதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

 அக்கரைப்பற்றிலிருந்து கல்முனை நோக்கி; பல்சர் ரக மோட்டார் சைக்கிளில் பயணத்திக்கொண்டிருந்த இளைஞர்கள் இருவரும் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அட்டாளைச்சேனை பிரதான வீதியின் மீனோiடைக்கட்டு வளைவில் பாதையயை விட்டு விலகிச் சென்றதில் இவ்விபத்துச் சம்பவம் இடம் பெற்றறுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து தொடர்பில்  அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  Comments - 0

  • abdulrafeeq Monday, 21 April 2014 05:47 PM

    முதலாவதாக மீனோடகட்டில் பாதையில் வேக தடை இடவேண்டும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--