2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வங்கி திறப்புவிழா

Kanagaraj   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் கல்முனை பிரதேச செயலக 'திவிநெகும' சமுதாய அடிப்படை வங்கி நேற்று(14) மாலை கல்முனை கிறீன்பீல்ட் வீடமைப்பு தொகுதியில் திறந்து வைக்கப்பட்டது.

கல்முனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைப் பிரதேச அபிவிருத்திக் குழுத்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதன் போது சமுர்த்தி பயனாளிகளுக்கு சுய தொழில் முயற்சிக்கான கடன் உதவிகள் வழங்கப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதேச மக்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

அம்பாறை மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார், கல்முனை பிரதேச செயலக தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஸி.ஏ.நஸீம், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர்களான  ஜனாபா எஸ்.எஸ்.பரீரா, ஏ.எம்.எஸ்.நயீமா, சமுர்த்தி திட்ட முகாமையாளர் ஏ.ஸி.அன்வர், சமுர்த்தி அதிகாரசபை முகாமையாளர் எம்.ஜே.எம்.நிஹ்மத்துல்லாஹ், சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.சதீஸ், சமுர்த்தி முகாமையாளர் எம்.எம்.எம்.முபீன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

மேலும் அதிகளவிலான பொது மக்கள் இந்த திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .