2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

அம்பாறையில் சுற்றாடல் முன்னோடி ஆணையாளர்கள் நியமனம்

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான்


அம்பாறையில் மாவட்ட, வலய மற்றும் கோட்டமட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்களின் உச்ச பயனைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் கல்வி நிருவாகத்தின் கீழ்வரும் மாவட்ட, வலய மற்றும் கோட்ட மட்டத்தில் சுற்றோடல் முன்னோடி ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் கல்வி மற்றும் விழிப்புட்டல் பிரிவு, கல்வியமைச்சு, கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஆகியவற்றின் பூரண ஒத்துழைப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சியின் முக்கியமானதோர் அங்கமாகவே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு அம்பாறை நகரிலுள்ள மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பிரதான காரியாலயத்தில் கிழக்கு மாகாண சுற்றாடல் பிரதி பணிப்பாளர் எம்.ஏ.ஸி.நஜீப் தலைமையில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.ரீ.எம்.நிஸாம், நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.

அம்பாறை மாவட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளராக எம்.ரீ.நௌபல் அலி, கல்முனை வலய சுற்றாடல் முன்னோடி ஆணையாளராக ஜனாபா மஸுரா, சாய்ந்தமருது கோட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளராக கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரி சிரேஸ்ட ஆசிரியர் எம்.ஐ.எம்.அஸ்ஹர், கல்முனை முஸ்லிம் கோட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளராக எம்.ரீ.இஸ்ஸதீன், நிந்தவூர் கோட்டத்திற்கு அப்துல் றஹீம், அக்கரைப்பற்று வலயத்திற்கு முஹம்மட் அன்வர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்துக்குட்பட்ட தெஹியத்தக்கண்டிய, மகாஓயா, உகன, தமன, பதியத்தலாவ மற்றும் அம்பாறை போன்ற சிங்களப் பகுதிகளுக்கும் கல்முனை தமிழ், இறக்காமம் கோட்டங்கள், திருக்கோவில், சம்மாந்துறை வலயங்கள், என்பவற்றிற்கும் சுற்றோடி முன்னோடி ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1984ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்படும் சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித் திட்டத்தின் செயற்பாடுகள் இன்று நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.

சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக நம் நாட்டுச் சுற்றாடலை பாதுகாப்பதற்காக எதிர்கால சந்ததிகளை உருவாக்குவதற்கு சுற்றோடி முன்னோடி ஆணையாளர்களின் பூரண ஆதரவு கிடைக்குமென எதிர்பார்ப்பதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--