2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

ஜனாதிபதியிடம் விருது பெற்ற மாணவன்

Kogilavani   / 2014 ஏப்ரல் 17 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


அரச மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சினால் நடத்தப்பட்ட அகில இலங்கை ரீதியிலான கட்டுரைப் போட்டியில் தரம் 11இல் கல்வி கற்கும் பொத்துவில் மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவன் லாபீர் எம்.சிறான் சல்மான் முதலாமிடம் பெற்று ஜனாதிபதியின் பாராட்டினையும், பரிசினையும் பெற்றுக்கொண்டார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற தேசிய ஐக்கியத்திற்கான மாநாட்டில் மேற்படி மாணவனுக்கு விருது வழங்கப்பட்டது.

இதன்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரூபா20,000 பணப்பரிசையும் சான்றிதளையும் மேற்படி மாணவனுக்கு வழங்கி வைத்தார்.
இம்மாணவன் இதற்கு முன்னரும் பல அகில இலங்கை ரீதியிலான கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--