Editorial / 2026 ஏப்ரல் 21 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்
நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் போது ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ரொக்வூட் தோட்டத்தில் இச்சம்பவம் நேற்று (ஏப்ரல் 20) இரவு 7 மணியளவில் நிகழ்ந்துள்ளது.
ரொக்வூட் தோட்டத்தைச் சேர்ந்த கந்தன் ஆண்டி (86 வயது) என்பவர் இடி மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்தார். உடனடியாக '1990' அவசர ஆம்புலன்ஸ் சேவை மூலம் அவர் கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், வைத்தியசாலையில் அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மதியம் 2 மணி முதல் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வந்தது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .