2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

ஒவ்வாமையால் மாணவர்கள் பாதிப்பு

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


அம்பாறை, அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றைச் சேர்ந்த மாணவர்கள் ஏழு பேர், திடீர் சுகவீனமுற்ற நிலையில் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் சற்றுமுன்னர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையைச் சேர்ந்த தரம் ஏழு மற்றும் தரம் ஆறைச் சேர்ந்த மாணவர்களை இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்மாணவர்கள் உட்கொண்ட உணவே அவர்களை பாதிப்படையச் செய்திருக்கலாம் எனவும் அரிப்பு, தோற்பகுதி தடித்திருத்தல் மற்றும் உடல்பலவீனம் போன்ற நோய் அறிகுறிகள் அவர்களிடம் தென்படுவதாகவும் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்கடர். ஏ.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.

இதற்கான காரணம் உடன் கண்டறியப்படாத போதிலும் இம்மாணவர்கள் சிற்றுண்டிச்சாலையில் உட்கொண்ட உணவு அல்லது சூழலில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக இவர்கள் பாதித்திருக்கலாம் எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் கண்டறிவதற்காக அட்டாளைச்சேனைப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .