2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

விபத்தில் இருவர் காயம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதான வீதியில் வியாழக்கிழமை (24) அதிகாலை  சிறிய ரக லொறியொன்று மின்கம்பமொன்றுடன் மோதியதால் இருவர் சிறு காயங்களுக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வாகன சாரதியும் அவ்வாகனத்தில் பயணித்த மற்றுமொருவருமே சிறிய காயங்களுக்குள்ளாகினர்.

விற்பனைக்காக மன்னாரிலிருந்து மீன்களை சாய்ந்தமருதுக்கு ஏற்றிக்கொண்டு வந்த லொறியே விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தால் குறித்த மின்கம்பம் சேதமடைந்ததுடன், மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டதால் மின்விநியோகம் தடைப்பட்டது.

இவ்விபத்து தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--