2021 மார்ச் 04, வியாழக்கிழமை

பயிற்சி செயலமர்வு

Thipaan   / 2014 ஒக்டோபர் 14 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


விஷேட தேவையுடைய பிள்ளைகளும் உட்படுத்தல் கல்வியும் எனும் தலைப்பில் சமூக மட்டத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களையும், செயற்குழு அங்கத்தவர்களையும் தெளிவுபடுத்தும் பயிற்சி செயலமர்வு  கல்முனையிலுள்ள அம்பாறை விஷேட தேவையுடையோர் வலையமைப்பு அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்றது.

அம்பாறை விஷேட தேவையுடையோர் வலையமைப்பின் இணைப்பாளர் பி.சலூஜா தலைமையில் இடம்பெற்ற பயிற்சி செயலமர்வில், நாவிதன்வெளி மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகங்களில் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் கீழ் கடமையாற்றும் உத்தியோகத்தர்களும். சமூக சேவை திணைக்களத்தின் கீழ் கடமையாற்றும் உத்தியோகத்தர்களும். பிரதேசத்திலுள்ள செயற்குழு அங்கத்தவர்களும், விஷேட தேவையுடைய மாணவர்களை கற்பிக்கும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சி செயலமர்வில் உட்படுத்தல் கல்வியின் அவசியம். உட்படுத்தல் கல்வியை சிறப்பு மிக்கதாக மாற்றியமைத்தல், இது தொடாபாக பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய செயற்திட்டங்கள் என்பன தொடர்பாக, அம்பாறை விஷேட தேவையுடையோர் வலையமைப்பின் தலைவரும், சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக உதவிப் பணிப்பாளாருமான எஸ்.எம்.எம்.எஸ். உமர்மௌலானா விரிவுரை நிகழ்த்தினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .