2021 மார்ச் 08, திங்கட்கிழமை

இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் விசனம்

Kogilavani   / 2014 ஒக்டோபர் 19 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

'கல்வி அமைச்சின் 2008/ 45 சுற்றறிக்கையின் நன்மைகள் முழுவதையும் பலருக்கு வழங்கியுள்ள சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகம், சிலருக்கு அதனை முழுமையாக வழங்க மறுத்து வருகின்றது. அதனால் அவர்கள் தொடர் நன்மைகள் பலவற்றை இழக்கும் பரிதாக நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்' என இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இஸ்லாமிய ஆரிசிரயர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

2008/45 சுற்றறிக்கை வெளிவந்து வருடங்கள் ஆறு கடந்துவிட்டபோதிலும் இன்னும் காலங்கடத்தப்பட்டு வருகின்றது.

1994.10.07 இல் சேவைக்கு வந்த பட்டதாரி ஆசிரியர், சேவையின் வகுப்பு 2-ஐஐக்குப் பதவி உயர்வுபெற 5 புள்ளியை அல்லது பின்கல்வி டிப்ளோமா சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் 1994.10.6 இல் சேவையில் இந்த பட்டதாரி ஆசிரியர் 5 புள்ளியை அல்லது பட்டப்பின்கல்வி டிப்ளோமா சான்றிதழ் பெற்றிருக்காவிட்டாலும், 1994.10.06இல் சேவையின் வகுப்பு 2-ஐஐக்குப் பதவி உயர்வுபெற அனுமதிக்கின்றது.

ஆசிரியர் சேவைக்கு அடுத்த தினத்தில் சேவைக்கு வந்த பட்டதாரிகள் 2-II க்கு மேல் பதவி உயர்வுபெற, பின்கல்வி டிப்ளோமா சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாகும். ஆனால் 1994.10.06இல் சேவையில் இந்த பட்டதாரி ஆசிரியர்கள்; பின்கல்வி டிப்ளோமா சான்றிதழைப் பெற்றிருக்கவிட்டாலும் 2-ஐஐக்கு மேல் புதவி உயர்வுபெற அனுமதிக்கின்றது. அதாவது பயிற்றப்படாத பட்டதாரிகளையும் பயிற்றப்பட்ட பட்டதாரிகளாகக்கருதி பதவி உயர்வு வழங்க அனுமதிக்கின்றது.

அவ்வாறே, இத்தினத்தில் சேவையில் இருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு, சேவைக்கு வந்த முதலாவது வருட ஆரம்ப தினத்தில் ஒரு புள்ளியும், பத்தாவது வருட ஆரம்ப தினத்தில் ஒரு புள்ளியுடன் (மொத்தமாக 9 புள்ளிகளுடன்) சேவையின் வகுப்பு 2 Iக்கான பதவி உயர்வு வழங்கவும் அனுமதிக்கின்றது.

ஆனால், இத்தினத்திற்குப்பின் சேவைக்கு வந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு, Nவைக்கு வந்த முதலாவது வருட இறுதி தினத்தில் ஒரு புள்ளியும், பத்தாவது வருட இறுதி தினத்தில் ஒரு புள்ளியுடன் (மொத்தமாக 10 புள்ளிகளுடன்) சேவை யின் வகுப்பு 2-I க்கான பதவி உயர்வு வழங்கவே அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதன்போது வருடத்தின் ஆரம்ப தினம் ஒரு நாள் என்பதையும், வருடத்தின் இறுதி தினம் 365 நாட்கள் என்பதையும் புரிந்துகொள்ள சம்மாந்துறைக் கல்வி வலயம் மறுக்கின்றது.

9ஆவது வருடமும் 9 வருடமும் அல்லது 10ஆவது வருடமும் 10 வருடமும் ஒன்று என்கிறது. இதன்காணமாக ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின் போது, ஒருவருட நட்டமும், ஒரு புள்ளி நட்டமும், பதவிக் காலத்தின்போது ஒரு வருட சம்பள உயர்வு நட்டமும் ஏற்படுகின்றது.

9ஆவது வருடத்திற்கும், 9 வருடத்திற்கும் அல்லது 10 ஆவது வருடத்திற்கும் 10 வருடத்திற்கும் என்ன வேறுபாடு? அதற்கு என்ன ஆதாரம்? என்று கேட்கும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு, 24 மணித்தியாலங்களைக் கொண்டது ஒருநாள் வருடத்தின் ஆரம்ப தினம் என்பதையும், 365 நாட்கள்களைக் கொண்டது ஒரு வருடம் வருடத்தின் இறுதி தினம் என்பதையும் புரியவைக்க அதனைக் கணித்த வர்களைத்தான் நாடவேண்டும்.

2008/ 45 சுற்றறிக்கையின்படி, ஆசிரியர் சேவையின் ஆரம்ப தினமான 1994.10.6 இல், சேவையில் இருந்த பட்டதாரி ஆசிரியர், ரூபாய் 1,560  பெறுமதியான 8 சம்பள உயர்ச்சிப் படிநிலைகளை உள்ளடக்கிய சம்பளத் திட்டத்தின் ஆரம்பப் படிநிலையில் அதாவது 53,880 ரூபாயுடன் ஒரு புள்ளியுடன், சேவையின் வகுப்பு 2-II இல் அமர்த்தப்படல் வேண்டும்.

தொடர்ந்து 9 ஆவது வருடத்தின் ஆரம்ப தினமான 2002.10.6 இல், ஒன்பது புள்ளியுடன் 8ஆவது சம்பள உயர்ச்சிப்பெறுமதியுடன் 66,360 ரூபாய் சம்பளப் படிநிலையில் அமர்த்தப்படல் வேண்டும். இது வருட இறுதி தினமான 2003.10.05 வரை தொடரும்.

மறுநாள் 10 ஆவது வருடத்தின் ஆரம்ப தினமான 2003.10.06 இல் 3,000 ரூபாய் பெறுமதியான 7 சம்பள உயர்ச்சிப்படிகளை உள்ளடக்கிய சம்பளத் திட்டத்தின் ஆரம்பப்படிநிலையில், அதாவது 80,400 ரூபாயுடன், ஒருபுள்ளியுடன், சேவையின் வகுப்பு 2 ஐஇல்; அமர்த்தப்படல் வேண்டும். இது 10 வருடம் முடிந்தபின் வரும் தினத்திலல்ல.

அவ்வாறு 2 I க்கு அமர்த்தப்படுவது 10 வருட முடிவில், 2004.10.06 இல் எனின், 2003. 10. 6 முதல் 2004.10.5 வரையிலான காலப்பகுதிக்கான சம்பளப்படி என்ன? சம்பள உயர்ச்சி என்ன? இந்த ஒருவருடத்தற்கான புள்ளிக்கான நன்மை என்ன? என்பதற்கு சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகம் பதில் சொல்ல வேண்டும்.

இச்சுற்றறிக்கையின் அமுலாக்கம் பற்றிய தெளிவாக்கம் 2009.11.4 இல், பட்டியிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில், முன்னாள் மேலதிக மாகாணக் கல்விப் பணிப் பாளர் எம்.கே.எம்.மன்சூர் தலைமையில் நடத்தப்பட்ருந்தமையும் அதில் நிர்வாகத்துக்கும் பொறுப்பான பிரதிக் கல்விப்பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், மற்றும் இரு முகாமை உதவியாளர்கள் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்க

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .