2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

புத்தக கண்காட்சி

Kogilavani   / 2014 ஒக்டோபர் 19 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்


கல்முனை, இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயம் ஏற்பாடு செய்த புத்தக கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (18) ஆரம்பிக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் எம்.சி.எம்.அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புத்தக கண்காட்சிக்கென  கல்லூரி ஆசிரியர்களால் சேகரிக்கப்பட்ட ஒரு தொகுதி புத்தகங்கள்  ஆசிரியர்களால் அதிபரிடம் கைய்யளிக்கப்பட்டதோடு  கல்லூரி மாணவர்கள்,  பெற்றோர்கள்  இக்கண்காட்சியைப் பார்வையிட்டனர்.

இப்பாடசாலை சுனாமிப் பேரலையால் பாதிக்கப்பட்ட நிலையில், அரச சார்பற்ற நிறுவனம் மீள்நிர்மாணம் செய்துகொடுத்தது. இப்பாடசாலை கட்டிடத்தில் நூலக வசதி உள்ளதால் இந்நூலகத்தை வறிய மாணவர்கள் பயன்படுத்தும் வகையில்  செயற்படுத்த உள்ளதாக அதிபர் இதன்போது குறிப்பிட்டார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .