2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

அரிசி நிவாரணம் வழங்கும் நிகழ்வு

Thipaan   / 2014 ஒக்டோபர் 25 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.சுகிர்தகுமார்

ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்டு தமது வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு, அரிசி நிவாரணம் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலகத்தில் நேற்று (24) நடைபெற்றது.

உலக உணவுத் திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட, உலர் உணவு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக 15,800 கிலோகிராம் அரிசி நிவாரணமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டது.

பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கடந்த கோடைகாலத்தில் நிலவிய கடுமையான வரட்சியால் முழுமையாகப் பாதிக்கப்பட்டும், அத்துமீறிய வனவிலங்குகளின் தாக்குதல்களால் பயிர்நிலங்கள் அழிக்கப்பட்டும் தமது வாழ்வாதார வருமானங்களை இழந்து பாதிக்கப்பட்ட எல்லைக்கிராமமான அளிக்கம்பையில் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் திவிநெகும உதவி பெறுகின்ற குடும்பங்களுக்கு, அரிசி நிவாரணமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .