2025 ஜூலை 12, சனிக்கிழமை

வாசிப்புமுகாம் திறந்துவைப்பு

Thipaan   / 2014 ஒக்டோபர் 30 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கார்த்திகேசு

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் திருக்கோவில் வலயக்கல்வி அலுவகத்துக்குட்பட்ட தம்பிலுவில் திகோ/ கலைமகள் வித்தியாலயத்தில், இன்று(30) வாசிப்பு முகாமொன்று  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு பாடசாலை அதிபர் பா.சந்திரேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற போது, திருக்கோவில் வலயக் கல்விபணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் பிரதம அதிதியாக கலந்தகொண்டு பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த மாணவர்களுக்கான வாசிப்புமுகாமை வைபவ ரீதியாகத் திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில், திருக்கோவில் வலயக் கல்விபணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன், திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தின் கணக்காளர் எம்.கேந்திரமூர்த்தி, பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு வாசிப்புமுகாமை திறந்து வைத்து பார்வையிட்டனர்.

இவ் வாசிப்பு முகாமானது, திறமையானகற்றல் செயற்பாட்டை மாணவர்கள் பெற்றுக் கொள்ளும் வகையில் இலகுவான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .