2021 மே 10, திங்கட்கிழமை

குடியிருப்பு பகுதிக்குள் 'கொம்பன்' நுழைந்ததால் பதற்றம்

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவின் குடியிருப்பு பகுதிக்குள் கொம்பன் யானையொன்று ஞாயிற்றுக்கிழமை (01) இரவு நுழைந்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு வயல் பிரதேசத்தினூடாக வந்த இந்த கொம்பன் யானை கோணாவத்தை ஆற்றங்கரையோரமாக கிராமத்துக்குள் நுளைந்துள்ளது.

தாம் தூங்கிக்கொண்டிருந்த வேளையில் சுமார் 11 மணியளவிலேயே யானை, குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

அந்த யானை, வீட்டுத் தோட்டங்களிலிருந்த வாழை மற்றும் தென்னை மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது.
யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துவிட்டதை கண்டுவிட்ட மக்கள், யானை விரட்ட பட்டாசு கொளுத்தியும், வெளிச்சம் காட்டியும் கூக்குரலிட்டு யானையை விரட்டியுள்ளனர்.

பிரதேச மக்கள் எடுத்த கடுமையான முயற்சியினால் இந்த யானை வந்த வழியூடாகவே கிராமத்தை விட்டு வெளியேறி விட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

காட்டு யானைகள் கிராமங்குள் நுழைவதை தடுப்பதற்கான மின்சார வேலிகளை அமைப்பதற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரையிலும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை செயலகத்தில் கடந்த வருடம் ஏப்ரலில் நடத்தப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தின் போதே காட்டுயானைகளிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காகவும் மின்சாரகம்பிவேலி அமைப்பதற்காகவும் 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X