2021 மே 15, சனிக்கிழமை

ஆவணப்படுத்தல் தொடர்பான கூட்டம்

Kogilavani   / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்  


கல்முனை  மாநகர சபைக்குட்பட்ட  மருதமுனையின்  உட்கட்டமைப்பு விரிவாக்கள் தொடர்பான  முன்மொழிவுகளும்,  ஆவணப்படுத்தலும்  தொடர்பான கூட்டம் சனிக்கிழமை(7) மருதமுனை பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.


இதில் மருதமுனையின் கல்வி, சுகாதாரம், வடிகான் அமைப்பு, குழாய் நீர் விநியோகம், வீதி விஸ்த்தரிப்பு போன்ற  தேவைப்பாடுகளை  முன்மொழிவு செய்யப்பட்டு  ஆவணப்படுத்தப்பட்டதுடன், இவற்றை நிறைவு செய்வதட்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவரிடம்  வேண்டுகோள் விடுப்பது என்றும் முடிவு செயப்பட்டது.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதி உயர்பீட உறுப்பினரும், மருதமுனை அமைப்பாளரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான  சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்  கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.உமர் அலி, எ.எல்.எம்.முஸ்தபா, கல்முனை  வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஜலீல், மருதமுனை பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி  எ.எல்.எம்.மிஹ்ளார் உட்பட பலரும் கலந்துகொன்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .