Kogilavani / 2015 பெப்ரவரி 10 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை, நிந்தவூர் விவசாய விரிவாக்கற் பிரிவிற்குட்பட்ட மாட்டுப்பளை பிரதேசத்தில் விவசாயத்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட பண்ணை இயந்திர மயமாக்கல் பரீட்சாhத்த நெற்செய்கையின் வயல் அறுவடை விழா இன்று செவ்வாய்க்கிழமை(10)இடம்பெற்றது.
விவசாயத்திணைக்களத்தில் வழிகாட்டல், ஆலோசனையுடன் ஒரு ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட றம்சீடா முறை, சிறிமெதேட், இயந்திரம் மூலமான விதை நடல், கையினால் விதை நடல் போன்ற முறைகளில் செய்கை பண்ணப்பட்ட மாதிரி நெற்செய்கையின் அறுவடைகளே இன்று இடம்பெற்றது.
இதன்போது ஒவ்வொரு முறையிலும் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின் விளைதிறன், நன்மை, தீமைகள், இலாப, நட்டங்கள் தொடர்பிலும் கண்டறியப்பட்டு அதிகாரிகளினால் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டன.
நிந்தவூர் தெற்கு விவசாய போதானாசிரியர் ஏ.எம்.றம்சி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விவசாயப்பணிப்பாளர் ஆர்.எஸ்.விஜேசேகர, விவசாய பிரதிப்பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ், உதவிப்பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் மற்றும் விவசாய போதானாசிரியர்கள், பாடவிதான உத்தியோகத்தர்கள் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
5 minute ago
17 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
17 minute ago
24 minute ago